விழிகளின்
விஷேச மொழியில்
பேசிக்கொண்டோம்
நாம்..
உன் இதயத்தை
எனக்குள்
பொருத்தும்
அதிசயத்தை
இமைப் பொழுதிலேயே
நிகழ்த்தி
விட்டாய்..
உன் கரிய விழிகள்
மிதக்கின்றன
மூடிய என்
கண்களுக்குள் ..
உன் இதயத்தை
ஒளி நகல் எடுக்கும்
முயற்சியில்..
தூக்க மற்றுத்
தொலைந்தன
என் இரவுகள்
கடற்பாறைகளின் மேல்
அடிக்கும் அலைபோல்
உனைப்பற்றிய
நினைவுகள்
ஓயாமல் என்
மனதிற்குள்.!
கனத்த மௌனங்களின்
திரையில்
மனம் மறைத்துக்
கொள்கிறாய் நீ..!
சுவாசங்களின்
வெம்மையிலும்
விரல் தீண்டும்
அழுத்தத்திலும்
தீ மூட்டுகிறாய்
அவ்வப்போது
என் உணர்ச்சிகளுக்கு..!
என் குளியல் அறை
நீருக்குப் பதிலாய்
இசையால்
நிரம்புகிறது..
எங்கோ யாரோ
சூடிய பூவின் வாசம்
மீண்டும் கொண்டு
வருகிறது
என் அருகில்
நீ இருந்த
அழகிய தருணங்களை.
அலையடிக்கும் கடல்
போல்
என் இதயம் உன்
வரவிற்காய்
பாய் விரித்து கிடக்கிறது..!
மழை பெய்து
முடித்த இரவில்
நிலா போல் ஒளி
வீசுகிறாய் நீ..!
நெருப்பில் உருகினாலும்
கருகாத மெழுகு போல்
என் சுடு மூச்சில்
நீ இன்னும்
அழகுறுகிறாய்...!
+ comments + 1 comments
congrats Writing a book can be very taxing yet fulfilling. Now is the time to launch your book to gain visibility. Try https://honestbookreview.com/ for reviews and marketing
Post a Comment