காதல் யுத்தம்


கருத்து யுத்தத்தினால்
நம் காதல் யுத்தம்
தற்காலிகமாய்
நின்று போனது..!
மௌனங்கள் நிரம்பிய
பனிப்போரில்
நாட்கள்
நத்தையாய் நகர்ந்து போயின..!

உனக்கான பாசத்தை நானும்
எனக்கான பாசத்தை நீயும்
போட்டி போட்டு
நம் பிள்ளைகள் மேல்
காண்பிக்கிறோம்..!

திடீர் பாச அதிகரிப்பில்
மிரண்டு போகின்றன
நம் மழலைகள்..!

என் தனிமையில் நெறிக்கும்
நிரந்தர பிரிவு பயம்
உன் தனிமையிலும்
தகிக்கிறது என்பதை
சொல்லாமல் சொல்லுகிறது
உன் நடையில் தெரியும்
சின்ன சின்ன மாற்றங்கள்..!

மாலையில்
வீடு புகுகையில்
சற்று மிகையான ஒப்பனையும்
சிகையில் நீ சூடிய
சிறு மல்லிகை சரமும்
அமர்த்தலான புன்னகையும்
சமாதான உடன்படிக்கைக்கான
மறைமுக அழைப்புகள்..!

நாட்களின் காத்திருப்பில்
களைத்துப் போன நீ..
வெகுண்டெழுந்து
வளைகுடா யுத்தம் போல்
வளைத்து வளைத்து
தாக்குதல் நடத்துகிறாய்.!

உன் அத்தனை
அஸ்திரங்களின்
தாக்குதலிலிருந்து
எப்படியோ
தப்பி விடும் நான்
உன்
விழி ஏவுகணையிலிருந்து
தப்ப முடியாமல்
தரை மட்டமாகிறேன்..!

சட்டை காலரை இழுத்து
எனை சுவரோடு சாய்த்து
மூக்கோடு மூக்குரசி
கண்ணோடு கண் கலக்கும் போது
செத்துப் போகின்றன
என் அத்தனை கர்வங்களும்..!

என் உதடுகளின்
ஈரம் துடைக்கும்
உன் செயலால்  
இன்னும்
ஈரமாகிப் போனது
நம் உதடுகள்..!

நம் உஷ்ணத்தை
குறைக்கும் முயற்சியில்
தோற்றுப் போகிறது
மின் விசிறி..!

காதலின்  நறுமணம்
உன் உடல் முழுவதும்
உஷ்ணமாய் பரவுவதால் -
நீ விடும்
சுடும் மூச்சு
என் வெற்று மார்பை
வருடும் போது
தாய்நாடு திரும்பும்
அகதிபோல்
உன் மார்போடு
புதைந்து போகிறேன்.!

Share this article :

+ comments + 1 comments

23 August 2020 at 04:43

magical ! Your book can be in the best seller list with a little push. Try https://honestbookreview.com/ for reviews and marketing.

Post a Comment

 
Support : Emmess Info Tech
Copyright © 2014. கடிகை பெர்னாட் - All Rights Reserved

Proudly powered by Blogger