ஹைக்கூ..சின்ன சின்ன துளிகள்


ஞானி..!
தி
ஓடுகிறது
எதிர்பார்ப்பே இல்லாமல்..!

வாழ்கை..!
புரிந்து கொள்வதற்குள்
முடிந்து விடுகிறது
அவசரம் அவசரமாய்..!

தாய்..!
டவுளை நம்பாதவனும்
வணங்கும்
ஒரே தெய்வம்..!

இசை..!
ன்மாவை
வருடுகிறது
ஆண்டவனின் குரல்..!
வெளிநாட்டு வேலை
நாள்தோறும்
முடிவு செய்துவிட்டே தூங்குகிறேன்
நாளை வேலைக்கு போவதில்லையென்று..!

சம்பள கவர்
போட்ட 'கூழைக்கும்பிடுகளும்'-
'ஆமாம் சாமிகளும்'
சிரிகின்றது ரூபாய் நோட்டுகளாய்..!

ரகசிய காதல்..!
னது எல்லா மின்னஞ்சலுக்கும்
ஒரே கடவுச்சொல்லாய்
உனது பெயர்..!

பேருந்து பயணத்தில்..!
ழைத்து வருகின்றன
ஜன்னலோர மழையும் - மல்லிகை வாசமும்
உனது ஞாபகங்களை..!


விவாகரத்து..!
காதலில் கலப்படம்
வெடிக்கிறது
வன்முறை..!

மச்சம்..!
உன் உதடுகள்
என்ன மெய்யெழுத்தா?
புள்ளிவைத்துப் படைத்திருக்கிறானே இறைவன்..!






Share this article :

Post a Comment

 
Support : Emmess Info Tech
Copyright © 2014. கடிகை பெர்னாட் - All Rights Reserved

Proudly powered by Blogger