நிலவுக்கும் கறை உண்டு



       
பரந்த எல்லைகளற்ற வானம் மனதின் உருவகம். மேக வண்ணங்கள் போல் மோக எண்ணங்கள் அலை மோதா மனம் எங்குண்டு.
அவ்வாறே அவள் எனக்குள் நிறைந்து நிற்கிறாள். முதல் முதலாய் அவளைப் பார்த்தபோது அட அழகாய் இருக்கிறாள் என்பதுடன் என் மனது அவளைப் பற்றி எண்ணுவதை நிறுத்திக் கொண்டது.
ஒரு சில நாட்கள் கழிந்து ஒரு பகல் பொழுதில் குடி நீர் குழாயில் குடத்தில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தவள் பைக்கில் அந்த வழியாய் சென்ற என்னை கண் கலக்க அகண்ட அவள் கரு விழியால் அளந்த போது விழுந்தவன்தான் நான் இன்னும் எழுந்திருக்க வில்லை.
அன்றைய பைக் பயணத்தின் முழுவதிலும் அவள் கண்கள் என் கூடவே வந்து என்னை விழுங்கிக் கொண்டிருப்பது போல் ஒரு மயக்க நிலையிலேயே கழிந்தது.
எல்லா பெண்களின் கண்களிலும் அத்தகைய சக்தி இருப்பதில்லை. எந்த திட நெஞ்சனையும் ஒரு கணம் தன் கடமையை மறக்கச் செய்யும் சக்தி கொண்ட கண்கள் அது.
விடாமல் துரத்தி துரத்தி அழகியல் உணர்வின் உச்ச கட்டமான காமத்தை தூண்டிக் கொண்டே இருக்கும் கண்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன்.
எல்லா ஆண்களுக்கும் ஒரு பலகீனம் உண்டு. சிலருக்கு பெண்ணின் முலைகள். அதிலும் ஒரு சிலருக்கு அளவில் பெரியதும் மற்றவருக்கு சிறியதுமாய் முலைகள் மேல் அப்படி ஈர்ப்பு. என் பாலிய பருவத்தில் என் நண்பர்கள் பெரும்பாலும் பெண்னின் மார்பகங்களையும் பின் புற புட்டங்களையும் சிலாகிப்பார்கள். ஆற்றில் குளிக்க வரும் பெண்கள் சோப்பு போடும் போது ஆடைகள் விலகுவதைப் பார்க்க ஒரு கூட்டம் எப்போதும் கண் கொத்திப்பாம்பாய் இருப்பார்கள். இப்போது அதற்கு வாய்ப்பில்லை. ஆற்றில் தண்ணீரே இல்லையே.
ஆக என் வயதுப் பையன்கள் எல்லாம் மங்கைகளின் முலைகளிலும், தொடைகளிலும் கவனம் செலுத்த என் பலவீனம் கண்கள்.
ஊமை விழிகள் படம் வீடியோ டெக்கில் பார்த்த போது எனக்கும் அந்த பட இயக்குனருக்கும் ஒரே ரசனை என்று நான் நினைத்ததுண்டு. நடிகர் ரவிச்சந்திரனை சிவாஜி என்று நினைத்த வயது அது. இப்படி பெண்களின் கண்கள்  மேல்  எனக்கு பிரியம் தொடங்கியது எப்போது என்பது எனக்கு விடை கிடைக்காத பதில் அது.
முதல் முதலாய் சரோஜா தேவியை பிடித்தது. அப்புறம் பத்மினியை கூட கொஞ்சம் பிடித்தது.ஸ்ரீதேவி மேல் பைத்தியமே உண்டு. அதுவும் செதுக்கிய மூக்குடன் வரும் நான் அடிமை இல்லை பட ஸ்ரீ தேவி மேல் வெறிபிடித்து அலைந்தேன். பெயர் தெறியாத அந்த மாத பத்திரிக்கையின் நடுப்பக்கத்தில் இருந்த ஸ்ரீ தேவி தான் கொஞ்ச நாள் என் ஆசை நாயகி. அப்புறம் மீனா ஸ்னேகா என்று எல்லா நடிகைகளுக்கும் உள்ள் ஒற்றுமை அழகான கண்கள்.....
அந்த வரிசையில் பெயர் தெரியாத அவளின் கண்கள் நாள் முழுவதும் என்னைப் பின் தொடர்ந்தது...

இரவு நேர வருகையில் நிலா போல் இருந்தாள் . முகம் கழுவி பௌடர் பூசிய முகத்தில் சாத்வீகம். உதடுகள்  இள ரோஸ் நிறத்தில் கவர்சியாய் நெளிந்தது.
கண்களில் எனை வீழ்த்திய அதே காந்தம்.
என்னை வதைத்துக் கொல்ல அவள் கண்களுக்கு உத்தரவிட்டிருப்பாளோ..?
வளைத்து வளைத்து அது என்னைக் கொன்றது.
மஞ்சள் நிற நைட்டி அவள் நிறத்துடன் போட்டியிட்டது. சற்றுக் குனிந்த நிலையில் முன் சுவரில் கையூன்றி நின்றபோது அவளின் மார்பக மேடுகளின் துவக்கம் மாம்பழ நிற மென்மை குவியலாய் , இரண்டு மார்பக இணைவின் மையம் நிழல் ஓவியமாய் தெரிந்து மீதமுள்ள மறைந்த பகுதிகளின் பரிமாணம் கற்பனையில் எனக்குள் தோன்றி என்னை இம்சித்துக் கொண்டிருப்பதை அறியாத குழந்தை போல் என் முன்னே நின்று கொண்டிருந்தாள்.
"என்ன விஷயம்" என்றேன்.
" ஊருக்கு புதுசா நீங்க ?"
"ஆம்.." - அவளுக்கு பதில் சொல்லிவிட்டு அவளின் அழகிய உதடுகள் உள்ளிருந்து வரும் அடுத்த வார்த்தைகளுக்கு காத்திருந்தேன்.
"நான் உங்கள் பக்கத்து வீட்டில்தான் இருக்கிறேன்..,"
"தெரியும்...நேற்று கூட பார்த்தேன்..குழாயில் தண்ணீர் பிடிச்சிட்டிருந்தீங்க".
" நானும் பார்த்தேன். பைக்கில் போய்ட்டிருந்தீங்க.." - இம்முறை அவள் உதடுகள் சொற்களுடன் சிறு புன்னகையையும் உதிர்த்தது. பிரிந்த  உதடுகளுக்குள் அழகாய் அரிசிப் பற்கள்.
எப்படிப் பார்த்தாலும் அழகாய் தெரிவது எல்லார்க்கும் வாய்ப்பதில்லை. அவள் அந்த ரகம். கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட பூமிபோல் அவளிடம் அழகு கொட்டிக் கிடந்தது. முகத்தில் கபடம் இல்லா குழந்தைத்தனம். கன்னங்களை உள்ளங்கையில் ஏந்தி அவள் நெற்றியில் முத்தமிட எழுந்த ஆவலை மறைத்துக் கொண்டு நல்லவன் போல் அவள் முன் நின்று கொண்டிருந்தேன்.
உசிரே போகுது உசிரே போகுது உதட்டை நீ கொஞ்சம் சுளிக்கையிலே....
எந்த பெண்ணிடம் இல்லாத ஏதோ ஒன்று உன்னிடம் உள்ளது...
இப்படி வரிசையாய் காதல் பாட்டை முனுமுனுக்கையில் உள்ளுக்குள் யார் முகம் வந்து உலுக்குகிறதோ..அவர் உங்களுக்கு சம்திங்க் ஸ்பெஷல்தானே..
இப்போது அப்படி அவள் எனக்கு.
வீட்டுத் திண்னையில் அமர் ந் திரு ந் தேன்.
ஊரே வெறிச்சென்று கிடந்தது.
குருசடியில் திருவிழா. கிட்டதட்ட எல்லா வீடுகளும் பூட்டிக் கிடந்தது. ஒலி பெருக்கிகள் சாமியாரின் மறை உரையை ஊர் முழுவதும் ஒலிபரப்பிக் கொண்டிருந்தது.
கடவுள் இருக்கிறாரோ இல்லையோ அவரின் பெயரால் மக்களுக்குச் செலவுகள் பல இருக்கிறது.
புது துணி..பலகாரம் இறச்சிக் குழம்பு சமையல் என்று வீட்டுச் செலவுகள் எகிறுவது ஒரு புறம் இருக்க...கத்தோலிக்க கடற்கரை சமுகங்களில் அன்பியம் என்ற ஒன்று  வந்து அது  உருவாக்கப் பட்டதன் நோக்கத்தை விட்டு விலகி திருவிழா காலங்களில்  வசூல்ராஜாக்களின்  பிரதிநிதிகள் போல் செயல்படுவது மனதை உறுத்துகிறது.
ஏதோ கொடுக்கிற பணம் நேரடியாக கடவுளுக்கு அனுப்பப் படுவது போல் சில பிரளயங்களும் நடை பெறாமல் இல்லை.
இவள் கொடுக்கவில்லை அவள் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் வாய்த்தகராறாய் மாறி  தெருச்சண்டைபோல் கேவலமாக நடந்து முடிந்த கதைகளும் உண்டு.
"என்ன தீவிர யோசனை போல...?"
அவள் புன்னகை மாறாமல் நின்று கொண்டிருந்தாள்.
"நீ கோயிலுக்கு போகலையா..?"
"இல்ல"
"ஏன்..?"
"இஷ்டமில்ல...கோயிலுக்கு போய் என்ன நடக்க போகுது?"
"கடவுள் நம்பிக்கை இல்லையா..?
" நெறைய்ய்ய இருக்கு..ஆனால் கோயிலுக்கு போறவங்க பேசுற பேச்சைப் பார்த்தா..அவங்களுக்கு நாம எவ்வளவோ கொள்ளாம்னு தோணுது,"
"சொந்த அனுபவம்.."? நான் வினவ
அவள் முகம் வாட்டமுற்றது. எதிர் வீட்டு முற்றத்து விளக்கை வெறித்து என் பார்வையை தவிர்த்தாள்.
நம்பிக்கை இல்லாத விஷயங்களில் நம்பிக்கை உண்டாக்குவது போல் சில சந்திப்புகள் நிகழும்.
அப்படியே அவள் சந்திப்பும். மெல்லிய சபலம் போல் தொடங்கிய அவள் மேல் கொண்ட ஈர்ப்பு. நாளடைவில் காமமாய் மாறி தற்போது காதலாய் மாறிவிட்டது. ஆம் அவள் அருகாமை கிடைக்க கிடைக்க காமம் கருகி காதல் பெருகி அவளை மகிழ்சி படுத்த என்னவெல்லாம் செய்ய முடியும் என்ற நிலைக்கு வந்து விட்டேன்.
அவள் முகத்தில் சிரிப்பை பார்ப்பதே எனக்கு திருப்தியான விசயமாகிவிட்டது.
ஒரு முறை தனிமையில் அவள் கேட்டாள்.
"ஏன் இவ்ளோ பாசம் என் மேல்?"
"தெரியல .... முன் ஜென்ம பந்தமோ என்னவோ..!"
"அதில எல்லாம் நம்பிக்கை உண்டா..உங்களுக்கு?"
"இல்ல ஆனா இப்ப வந்துடுச்சு?"
இனிமையாய் சிரித்தாள்.
"நீங்க நினைக்கிற அளவுக்கு நல்ல பெயர் இல்ல ஊர்ல எனக்கு?"
"இருக்கட்டும்.."
"எத்தன நாள் தனிமைல இருந்திருக்கோம் ஒரு நாள் கூட தப்பான ஆசை வரலியா.."
"தொடக்கத்தில வந்ததுண்டு...ஆனா இப்ப இல்ல"
"அதான் ஏன்...?"
"காதல்.."
அகண்ட கண்களால் அரை நொடி என்னை வெறித்தாள். மெல்லிய பெரு மூச்சுடன் எழுந்து கொண்டாள்.
"டைம் ஆச்சு கிளம்புறேன்.."
"ம்..ம்"
அவள் மறையும் வரை அவளையே பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.
தனிமை-
நம்மை நாமே புடம் போட வாய்ப்பளிக்கும் சந்தர்ப்பம். மிகச்சரியாகப் பயன்படுத்தினால் ஆத்மாவை நிதானப்படுத்த முடியும். தேவையற்ற கோபம் , வெறுப்பு, சந்தேகம், மன உளச்சல் அனைத்தையும் களைந்து மனதை சமப்படுத்தி விடும். இன்று பலருக்கு அத்தகைய தனிமை வாய்ப்பதில்லை. வாய்த்தாலும் பயம் வந்து விடுகிறது. தேவையற்ற எண்ணங்களைப் பின் தொடர்ந்து இன்னும் இன்னும் குழம்பி விரக்தியின் உச்சம் எய்துவிடுகிறது மனம். ஆக தனிமை இருபக்க கூர்மையான கத்தி. தனிமையை நாம் ஆள வேண்டும். நம்மைத் தனிமை ஆள இடமளிக்கக் கூடாது.

என் இதயத்தில் பல கூக்குரல் எதிரொலித்தது...
"அவ கிட்ட கவனமா இருங்க அவ ஒரு வேசை..."
"கலியாணத்துக்கு முன்னாடியே எத்தன பேர் கூட பழக்கம்னு சொல்ல முடியாது...அந்த பையன் பாவம் .... கடைசில அவன் கையேத்தான்.."
"எத்தன குழந்தைய இரகசியமா போய் எறக்கினானு தெரியுமா...உங்க பேரும் கெட்டு போவும்..ஜாக்கிரதையா இருங்க தம்பி" - அவள் வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளி இருக்கிற ஒரு நடுத்தர வயது பெண் சொன்னாள்.
அவளின் குழந்தை முகம்  மனதிற்குள் எழுந்து மறைந்தது.
யார் யோக்கியன் இங்கே..எவள் பத்தினி இங்கே...பயம்....எல்லாருக்கும் பயம். வெளியே தெரிந்தால் அவமானம் என்ற பயம்...
Share this article :

Post a Comment

 
Support : Emmess Info Tech
Copyright © 2014. கடிகை பெர்னாட் - All Rights Reserved

Proudly powered by Blogger