வெகு தூரத்தில் நீ..




நீயோ
கண்களால் பேசுகிறாய்
நானோ 
கவிதைகளால்
பேசுகிறேன்..!



தூங்கி எழுந்த
உன் முகம்
கொள்ளை அழகு..!



உன்னை பார்க்கும் நாட்கள்
எல்லாம் 
எனக்கு விஷேச நாட்கள்

உன்னுடன்

பேசாத
நாட்களில்
நம் காதல்
இன்னும் அடர்த்தியாகிறது..!

உன் விழி இதழ்கள்
பட பட வென அடித்துக்
கொண்டன..! - அதன்
பாஷை புரியாமல்

நின்று துடித்தது

என் இதயம்..

உன்னை பிரிவது

வலியைத் தருகிறது
இருப்பினும்
பிரியவே விரும்புகிறேன்
வேறு வழியில்லை


வீணே கடந்து போகிறது
காதலர் தினங்கள்
நீ
சம்மதம் சொல்லாமல்..!








எப்படி நடந்தது
இந்த காதல் விபத்து
எண்ணிப்பார்க்கையில்
ஏறி இறங்குது உயிர் மூச்சு..!

முட்டைக் கண்கொண்டு
என் இதயம்
நீ முட்டி மோதியதால்(2)
குப்பென்று பற்றியது
காதல் நெருப்பு..!
தப்பென்றும் தெரியவில்லை
எனக்கும்..!

தீ பற்றிய இடம் 
கருகுதல் இயல்பு..! (2) - 
என்ன அதிசயம்
என் இதயமோ
பூக்களையல்லவா பிரசவிக்கிறது..!

வானம் வேர்க்கும் 
ஒரு மழை நாளில்
வானவில் போல் உன் வருகை
மின்சார பந்தங்கள் 
அணைந்து போக
விழிப் பந்தம் ஏந்தி 
நெருங்கி நின்றாய்
மெய் தீண்டும் வேகத்தில் 
நான் நெருங்க
கை தீண்டுதலுடுடன் 
தடை போட்டாய்
கவலையில் நானோ
விடை பெற்றேன்..!
உண்மையாய் காதல் நீ கொண்டாலும்
உள்ளம் திறக்க மறுக்கிறாய்
கள்ளக் காதலென்று
ஊர் சொல்லுமோ என
கள்ள மௌனம் சுமக்கிறாய்..!

வெள்ளிதோறும் சூடம் வாங்கி 
சுற்றிப் போடுகிறேன்
.நம் காதலுக்கு - பிறர்
கண் பட்டு விடக் கூடாது என்று..!

H2O நீர்
நீ2நான் காதல் (2)
நீரின்றி அமையாது உலகு - உன்
காதலின்றி அமையாது 
என் மனது...

உன்னிடம் 

பேச விரும்பியதெல்லாம்பேசித் தீர்த்துவிட்டேன்..........................................கனவில்..!



சவுக்கு மரங்கள் அடர்ந்த
கடற்கரையின்
வெள்ளை மணலில்
கால் புதைய
நடந்து கொண்டிருந்தேன்..
மனதிற்குப் பிடித்த
அதே பாடலை
மனதிற்குள் பாடியபடி..
சத்தமாய் பாடும்
ஆவல் உந்தித் தள்ள
சுற்றும் முற்றும் பார்த்தேன்
ஆள் யாரும் இல்லை யென்பதை
உறுதி செய்ய..!
அதுவரை கண்ணில் படாத
பறவை யொன்று
என் தோள் உரசி பறந்து சென்றது
நான் மனதிற்குள்
பாடிய அதே பாடலை
சத்தமாய் பாடியபடி..!



Share this article :

Post a Comment

 
Support : Emmess Info Tech
Copyright © 2014. கடிகை பெர்னாட் - All Rights Reserved

Proudly powered by Blogger