முத்தம்

முத்தம் பறிமாற
இடம் போதவில்லை
உன் கன்னத்தில்.!

கொண்டு வந்த முத்தங்களை
கொடுத்து முடித்த பின்பும்
இன்னும் மீதமிருக்கிறது
உனக்கான என் முத்தங்கள்..!

முத்தமிட்டு முத்தமிட்டு
நம் காதலை
முழுமை படுத்தும்
முயற்சியில்
புண்ணாகிப் போகின
நம் உதடுகள்..!

இயற்கையைப்பற்றி
கவிதை எழுதச்சொன்னாய்
நீ..
உன் கன்னத்தில்
முத்தமிடுகிறேன்..
இந்த கணத்தில்
நீயும் இயற்கையும்
ஒன்றுதான் எனக்கு
மெல்ல சொல்லுகிறேன்
உன் காதுகளில்
நீயோ
காதலால்
என்னை
கொல்லுகிறாய்..
விடாமல்
தொடர்கிறது முத்தம்
விடியும்  வரையும்.
விடிந்த பின்னும்..









Share this article :

Post a Comment

 
Support : Emmess Info Tech
Copyright © 2014. கடிகை பெர்னாட் - All Rights Reserved

Proudly powered by Blogger