5. இன்னொரு விதிசெய்வோம்
பூசை முடிந்தபின்பு
ஆலயத்துக்கு வருவதுதான் அவன் வழக்கம். பனிரெண்டாம் வகுப்புவகுப்பு வரை ஒன்றாய்
படித்த நண்பர்கள் கல்லூரி படிப்புக்காக வேறு வேறு ஊர் என்று பிரிந்தபின்பு நட்பை
புதுபிக்கவும், அவரவர் அனுபவங்களை பகிரவும் ஞாயிற்றுகிழமை பூசைமுடிந்தபின்
நடக்கும் சந்திப்புதான் வடிகால்.
வழக்கமாக சந்திக்கும்
இடத்தில் நண்பர்கள் கூட்டம் இல்லை. எங்கே போய்விட்டார்கள் இவர்கள். மொபைலை எடுத்து
சுனிலை அழைத்தான்.
"மக்கா எங்க
போயிட்ட"
"நான் வீட்டுக்கு
வந்திட்டேண்டா..நம்ம பசங்களும் வீட்டுக்கு போயிட்டானுக."
"ஏண்டா..சீக்கிரம்
போயிட்டீங்க.?"
"புதுசா
வந்திருக்கிற சின்ன சாமியார் இளஞர்களை பாக்கணும்னு சொன்னாரு. நமக்கு இதெல்லாம்
சரிப்பட்டு வராது. கோயில் பக்கம் நின்னிட்டிருந்தா வா.. வா..னு கூப்பிடுவாரு அதான்
நாங்களெல்லாம் எஸ்கேப் ஆயிட்டோம்"
பேசிக்கொண்டிருக்கும்
போது பெஞ்சமினின் கண்கள் தேவாலயத்திற்குள்
ஓடியது. திருப்பலி முடிந்த பின்னும் கோவிலைவிட்டு வெளியேறாமல் இளைஞர் பட்டாளம்
கூடத்தில் குழுமியிருந்தது.
'ஒரு
பங்கில் புதிதாய் ஒரு பணியாளர் வந்துவிட்டால், பக்த சபையினர்களையும், பாடகர்
குழுவினரையும், மறைக்கல்வி மன்றத்தினரையும் - தான் முதல் முதலில் சந்திக்க
விரும்புவது வழக்கம். ஆனால் இவர் மட்டும் சற்று வித்தியாசமாய் இளையோர்களைத் தேடி..'
அவன் மனதில் எதிர்பார்ப்புரேகை ஓடியது. அவனும் கோவிலுக்குள் இருந்த கூட்டத்தினருடன்
சேர்ந்துகொண்டான். கூட்டத்தில் பெரும்பாலானோர் படிக்காமல் சிறு வயதிலேயே கடலுக்கு
போனவர்கள்.
அவர்களை
அதிக நேரம் காக்க வைக்காமல் சின்னசாமியார் அருள்ராஜ் வந்தார். எல்லாரும் அவருக்கு
வணக்கம் சொல்ல, ஸ்னேகமான புன்னகையுடன் இருந்த அவர் பதில் வணக்கம் சொன்னார். புத்தம்
புதிய வெள்ளையங்கி அணிந்து, மெல்லிய உடலும், நல்ல சிவந்த நிறமுமாய் எளிமையாய்
இருந்த அவர் முகம் அனைவரையும் ஈர்த்த்து.அவர் முகத்தில் புது சாமியர்களுக்கே உரிய
சிறப்புக் களையும் தேஜஸூம் இருந்தது.
தன்னை
பற்றிய சுய அறிமுகத்தை முடித்து கொண்டபின்பு, தெளிவான குரலில் அவர் பேசினார்,"
உங்களை எதுக்கு சந்திக்க வந்திருக்கேனு யூகிக்க முடியுதா?".
கூட்டம்
ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டது.என்ன விஷயமா இருக்கும் கண்களால்
கேட்டுக்கொண்டது.
"
இந்த ஊரோட பெரிய சொத்து எதுனு தெரியுமா?"
'என்னடா
இது வந்ததும் வராம சொத்துக்கணக்கை கேட்கிறாரு அதை கணக்கு பிள்ளகிட்டு கேட்டு
தெரிஞ்சுக்களாமே' - சிலர் இப்படி மனதிற்குள் எண்ணிக்கொண்டிருக்க , ஒருவன், "பெரிய
குளத்து ஏலாவை சுற்றி வாங்கிபோட்டிருக்க தென்னந்தோப்பும்,வயலும்தான் பெரிய சொத்து
" - சொல்லி முடிக்குமுன்பு கூட்டம் சிரிபலையில் மிதந்தது. சாமியாரும்
சிரித்துக்கொண்டார்.
"நீங்களே
சொல்லுங்க சாமி, எங்களுக்கு மரம்கெட்டனும், வலை பாக்கணும், எஞ்சினுக்கு ஆயில்
மாத்தணும் இப்படி நெறைய வேலை. வயித்து பசிவேற குடலை புரட்டுது"
அமர்ந்திருந்தவர்களில்
நேர நெருக்கடி அவருக்குப் புரிந்ததென்பதால் அவர்களின் நேரத்தை விரயம் செய்ய
விரும்பாத இணைப் பங்குப்பணியாளர் நேரடியாக விசயத்துக்கு வந்தார். "நம்ம ஊரில
இளைஞர் இயக்கம் தொடங்கணும்னு நினைக்கிறேன் நீங்க என்ன சொல்லுறீங்க"
"அதெல்லாம்
எதுக்கு சாமி, அதான் ஊருல பங்கு பேரவை இருக்கு, நிறைய சபைகள் இருக்கு, இவங்கயெல்லாம்
செய்யாததையா நாங்க செய்யப்போறோம்." - கூட்டத்தில் சில முணுமுணுப்புகள்
எழுந்தன.
இந்த
முணுமுணுப்புகளால் மன உறுதியை இழக்காத பணியாளர் பேசினார், நீங்க சொல்லுற இந்த
எல்லா அமைப்புகளும் கோவில் பணியைத்தான் செய்யுது ஆனா இந்த சமூகத்துக்கான பணியை
செய்யணும் அதுக்குத்தான் உங்களை இயக்கமா இணைய சொல்லுறேன். இந்த ஊரோட பெரிய சொத்தே
நீங்கதான். கிட்டத்தட்ட ரெண்டாயிரம் இளைஞர்கள் இருக்கிற இந்த ஊரில ஒரு நூறுபேர்
தன்முனைப்போட செயல்பட்டா இந்த ஊரில இருக்கிற பல பிரச்சனைகளுக்கு விடுதலை
கிடைக்கும்.அது போல ஒவ்வொரு இளஞனுக்கும் இந்த சமூகத்தைப்பற்றிய பிரக்ஞை இருக்கணும்
இதுதான் அடுத்த தலைமுறைக்கு நீங்க கொடுக்கிற பெரிய சொத்து"- அவர் சொல்வதை
ஒன்றிரண்டு பேர் தவிர பலர் சரியாக உள் வாங்கவில்லை என்றாலும் அவர் பேச்சுத்
தொனியில் ஈர்க்கப்பட்ட கூட்டம் சற்று அமைதியாகியது. "ஆளைப்பாத்தா
நல்லவராத்தான் இருக்கார்"- ஆங்காங்கே சிலர் முனகிகொண்டனர்.
அவர்களின்
மனநிலை மெல்ல மெல்ல மாறும் என்பதில் உறுதியாய் இருந்த இளம் பணியாளர் சிறிய
இடைவெளிக்குப் பின் கழுத்தில் தொங்கிய சிலுவையை வருடியபடிசொன்னார், "நான்
சொன்னதில் விருப்பம் உள்ளவர்கள் இங்கிருங்கள். மற்றவர்கள் விடைபெறுங்கள்
காத்திருந்ததுக்கு நன்றி" - விட்டால் போது போய்விடலாம் என்றிருந்த சிலர் உடனே
எழுந்துவிட்டனர். அவனே போறான் நான் மட்டும் எதுக்கு இருக்கணும் என்ற எண்ணத்தில்
சிலர் கலைந்தனர். ஐந்தே நிமிடத்தில் கூட்டம் குறைந்து, பின்னர் குறுகி நூறு பேராய்
ஆனது.
"பரவாயில்லை
விவேகானந்தன் சொன்னதுபோல் இந்த ஊரை மாற்றும் நூறுபேர் எனக்கு கிடைதிருக்கிறீர்கள்.."
- கண்களில் புத்தொளிவீசச் சொன்னார் பாதிரியார்.
"உங்களிடம்
ஒரு கேள்வி.." - கூட்டத்திலிருந்து ஒரு குரல் வெடித்தது.
"உனது
பெயர்"
"பெஞ்சமின்"
"கேள்.."
"ஏன்
இளைஞர்களை மட்டும் அழைத்தீர்கள்.."
"இளைஞர்கள்
உலகையாளும் சக்தி"
"அதனால்..?"
"நீங்கள்
இணைய வேண்டும்"
"பெரியவர்களை
மீறி எங்களால் என்ன செய்ய முடியும்..?"
"அவர்களை
மீறவேண்டியதில்லை நீங்கள் சரியான பாதையில் சென்றால் அவர்களாகவே உங்களுக்கு வழிவிட்டுத்தருவார்கள்.தேவைப்பட்டால்
வழிகாட்டவும் செய்வார்கள்" - புன்முறுவல் மாறவில்லை பாதிரியார் முகத்தில்.
"சமூக
அக்கறை எங்களுக்கு எதுக்கு..வேலை,வீடு, குடும்பம் என்றிருந்தால் போதாதா?"
"விருப்பம்
இல்லாதவர்களைத்தான் போகச் சொன்னேனே நீயும் போக வேண்டியதுதானே.."
"விருப்பம்
இருக்கிறது விளக்கம்தான் கேட்டேன்"
"என்ன
வயது உனக்கு"
"இருபத்து
இரண்டு"
"சரியான
வயதுதான் ஆனால் அறியாதவன் போல் பேசுகிறாய்"
"அறிந்ததால்தான்
பேசுகிறேன்"
"என்ன
அறிந்துகொண்டாய்"
"தன்னையறியச்
சொன்ன சாக்கிரடீசுக்கு விஷம் கொடுத்து இந்த சமூகம்தான். சேகுவேராவை,லிங்கனை,காந்தியை
கொன்றது இந்த சமூகம்தான் இவர்களை விடுங்கள்..நீங்களும் நானும் பின்பற்றும் இயேசு
கிறிஸ்துவை கொலைக்களம் அனுப்பியதும் இந்த சமூகம்தான். நல்லவர்களை கொன்று குவித்த,அவர்களை
புரிந்து கொள்ளாத இந்த சமூகத்திற்குத்தானா நாங்களும் சாகவேண்டும்.."
"பேசி
முடித்துவிட்டாயா..! கொஞ்சம் மூச்சும் வாங்கிக்கொள்"- சலனமற்று ஒலித்தது சாமியாரின்
குரல். "நீ சொன்ன இத்தனை பேரும் கொல்லப்பட்டார்கள். ஆனால் யாரும் சாகவில்லை. மரணம்
உடல் சார்ந்ததல்ல. உண்மை சார்ந்தது. புரிந்துகொள். உன்னையறிந்துகொள்..!"
பாதிரியார்
கூட்டம் பார்த்து உரக்கச் சொன்னார், "நீங்கள் கூடிஇருப்பது உங்களுக்குள்
இருக்கும் தேடலால்தான். நான் உங்களை அழைத்தது எனக்குள் உள்ள தேடல். 'தேடுங்கள்
கண்டு கொள்வீர்கள்'-இயேசு சொன்னார். நான் உங்களை கண்டு கொண்டேன் நீங்கள் என்னை
தெரிந்து கொண்டீர்கள். இந்த ஊரின் பிரச்சனைகள் நான் அறிவேன். சின்ன சின்ன
காரணங்களுக்காக பெரிய பெரிய சண்டைகள். இரண்டுபேருக்குள் நடக்கும் வாக்குவாதம் இரண்டே
நிமிடத்தில் தெருச்சண்டையாகிறது. சிலர் ஊதி ஊதி பெருசாக்கி அதை ஊர் சண்டையாக்குகின்றனர்.
என்ன வேறுபாடு உங்களுக்குள் சாதியா..? மதமா..?ஒரே இனம். ஒரே மதம். பின் எதற்கு
சண்டை..!ஏன் சச்சரவுகள்..!மதமும், இனமும்,சாதியும்தான் சண்டைக்கு காரணமென்று உலகம்
தவறாக புரிந்து வைத்துள்ளது. உண்மை வேறு அதன் தன்மையும் வேறு...அதை நீங்கள் உணரவேண்டும்
நமது அடிப்படை மதிப்பீடுகள் மாறவேண்டும்" அவர் பேசப்பேச இளைஞர் கூட்டம் எழுச்சியுற்றது.
பெஞ்சமின்
எழுந்து சொன்னான், எங்களை பிரிக்க பலர் இருக்கிறார்கள் - ஆனால் இணைக்கத்தான்
யாருமே இல்லை. இப்போது அந்த குறை தீர்ந்தது.எங்கள் இதயத்தில் இருள் நீங்கியது"
பாதிரியார்
பரவசமுற்றார். 'இவர்கள் சரியான விதைகள்தான் விழுந்த இடம்தான் சரியில்லை. 'அவர்
தொடர்ந்து பேசினார்."நான் உங்களுக்கு சொல்லுகிறேன் நான் ஒரு வழிப்போக்கன். ஓராண்டுதான்
எனக்கு உங்கள் ஊரில் பணி. அதுவரைதான் நான் உங்களோடு பின்னர் என் பயணம் வேறு என்
பாதை வேறு. உங்களை வழிநடத்தும் தலைவர்கள் உங்களில் உருவாகவேண்டும். அதற்கான
முயற்சியும் முறையான பயிற்சியும் வேண்டும். இப்போது உங்களில் ஒருவனை
தேர்ந்தெடுப்போம் "
"இவன்தான்
இதற்கு சரியான ஆள்"ஒருவனின் கை பெஞ்சமினை சுட்டியது. இன்னொருவன் அவனை
வழிமொழிந்தான்.
"ஆம்..இவன்
படித்தவன் எங்களுக்கும் பிடித்தவன்"
"இல்லை
இல்லை எனக்கந்த தகுதி இல்லை நான் தலைவனல்ல உங்களில் ஒருவனாகத்தான் இருக்க
விருப்பம்" - அவசரமாய் மறுத்தான் பெஞ்சமின்.
"இந்த
தன்னடக்கம்தான் தலைவனின் முதல் தகுதி.." - பாதிரியார் அவனை பணித்தார். அனைவரின்
கைகளும் இணைந்து கரவொலியால் அதை ஆமோதித்தன.
பெஞ்சமின்
கூட்டத்தின் முன் எழுந்து நின்றான். அவன் முகத்தில் புதிய நம்பிக்கை ஒளி. இந்த ஊர்
நிச்சயம் மாறும். இத்தனை நாட்கள் இதற்காகத்தானே ஏங்கினோம், "நண்பர்களே உங்களை
மதிக்கிறேன். உங்களின் கருத்தை ஏற்கிறேன்.ஒரு சமூகம் மாறவேண்டுமென்றால் அதன்
அடிப்படை மாறவேண்டும். தவறான கருத்துக்களாலும் நம்பிக்கைகளாலும் நமது இதயம் என்ற
குளம் கலங்கி இருந்தது. அதில் சில சுய நலமிகள் மீன்பிடித்து விட்டனர். இனி அதற்கு
வழியில்லை அந்த கனவுகளை நமது இளைய
பங்குதந்தை விதைத்துவிட்டார். நாம் ஒன்றிணைந்திருக்கிறோம் என்ற நம்பிக்கையில்
சொல்லுகிறேன், இளைஞர்கள் உலகையாளும் சக்தி இனியொரு விதி செய்வோம். இந்த
யுகத்தையும் வெல்வோம்" உணர்சியுடன் ஒலித்தது அவன் குரல்.
மகிழ்சியும் திருப்தியும் ஒவ்வொரு
மனிதனுக்கும் வாழ்கையில் மிக அவசியம். நீங்கள் வாழ்கின்ற வாழ்கை உங்களுக்கு
திருப்தியை தருகிறதா மகிழ்சியாக
இருகிறீர்களா என்று கேட்டால் பலர் உதட்டை பிதுக்குவார்கள். காரணம் மகிழ்சி என்ற
சொல்தான் ஒன்றே தவிர அதற்கான அளவுகோல் மனிதனுக்கு மனிதன் மாறுபடுகிறது.
சிலருக்கு
நினைத்த வேலை கிடைப்பதுதான் மகிழ்சி. சிலருக்கு அழகான மனிவி, சிலருக்கு சொந்த
வீடு, சிலருக்கு பணம்,சிலருக்கு புகழ் இப்படி மனிதன் தனது மகிழ்ச்சிக்கான
அளவுகோல்களில் உண்டாக்கி அது கிடைக்காத போது துன்பத்திலும், கிடைக்கின்ற போது
திருப்தியுமாய் உணர்கிறான்.
பெஞ்சமின்
அன்று முழுவதும் மிகவும் மகிழ்சியான மனநிலையில்தான் இருந்தான். அவன் மனம் எதையோ
சாதித்து விட்டதுபோல் ஆனந்தத்தில் மிதந்துகொண்டிருந்தது. சிறு வயதுமுதல் எந்தவித
எதிர்பார்புக்குள்ளும் சிக்காத அவன் மனம் இன்று ஊரில் தொடங்கப்பட்ட இளைஞர் இயக்கம்
புதிய எதிர்பார்ப்பையும் அதில் அவன் ஆற்றயிருக்கும் பங்கும் அவனை மிகத்திருப்தியாய்
உணரவைத்தது.
பொதுவாக
பெரும்பான்மையினர் தான், தனது குடும்பம் என்ற கனவுகளில்தான் வளையவருகின்றனர்.
மிகச்சிலரிடம் மட்டுமே சமூக பிரக்ஞை எப்போதும் உண்டு. நிகழ்கின்ற ஒவ்வொரு
செயல்களிலும் சமூகத்தில் ஏற்படும் தாக்கம்பற்றி தன்னையறியாமல் எவனொருவன் உள்மனம் லயித்துக்
கிடக்கிறதோ அவனால் மட்டுமே தன்னலம் தாண்டி சமூக நலம் பற்றி சிந்திக்க முடியும்.
பெஞ்சமின் மனம் இரண்டாம் வகை மனிதர்களைச்சார்ந்த்து. வீட்டில் இருக்கும்
பிரச்சனைகளை அவன் மனம் பெரிதாக எண்ணி மனம் குமுறிக்கொள்வதில்லை. தான் இந்த
சமூகத்துக்கான மனிதன் என்ற விதை அவனையறியாமல் எப்போதோ அவன் மனதிற்குள்
விதைக்கப்பட்டிருந்தது. அதன் காரணம் அவனுக்கு புரியவில்லை. புரிந்து கொள்ள
விருப்பமும் இல்லை. எப்படியோ சராசரி மனிதனின் கனவுகள்தாண்டி அவன் உருவாகி
இருந்தான்.
வீட்டில்
வந்தபின்பும் அவன் மனம் திரும்ப திரும்ப சிறிய பங்குதந்தை சொன்னதை சுற்றி வந்தது.
இளஞர்கள் உலகையாளும் சக்தி. சமூக மாற்றத்திற்கான திறவுகோல் அவனிடம் மட்டுமே உண்டு.
சமூகம் வீழ்வதும் எழுவதும் அவன் கையில்.
"யே..பெஞ்சமீனு
எவ்ளோ நேரமா உன்னை கூப்பிடுறது..கோயுலுக்கு போயிட்டு வந்த சாப்பிடனும்னு
எண்ணமுண்டா..? அப்பா தெக்க போயிருக்கு வலை கெட்டணூமாம் சாப்பிட்டிண்டு சீக்கிரம்
போ"
கத்தரிக்கப்பட்ட
கனவுகளுடன், சுருக்கம் கூடிய தன் அம்மாவின் முகம் பார்த்தான் பெஞ்சமின்.
பெரும்பாலும் அம்மாவின் முகத்தை மிக அருகில் பார்க்க அவனால் முடியாது. வயோதிகம்
வரியோடிருக்கும் அந்த முகத்தைப்பார்க்கும் போதெல்லாம் அவன் மனம் நெகிழ்ந்து
கண்களில் நீர் முட்டிக்கொண்டு வரும். உங்களில் முகவரிகள்தான் எனக்கு முகவரி
தந்திருக்கின்றன அம்மா என்று மனதிற்குள் சொல்லிக்கொள்வான். உங்கள் முகத்தில் உள்ள
ஒவ்வொரு சுருக்கங்களிலும் என்னைப்பற்றிய
கனவுகளையல்லவா சேகரித்து வைத்திருக்கிறீகள்.
காலை
உணவை முடித்துவிட்டு கடற்கரையில் இருக்கும் ஒண்ணாம் நம்பர் தெரு மீனவர்
ஓய்வகத்துக்கு வந்தான். அப்பா..! மெலிந்து போன கருத்ததோளுடன் அப்பா கடமையே கண்ணாக
இரவு மீன்பிடிக்க கொண்டுசெல்ல வேண்டிய வலையின் பீத்தையை(கிழிசல்) கங்கூசு நூலால்
அடைத்துக்கொண்டிருந்தார்.
"என்ன
இவ்ளோ நேரம். சாயங்காலம் எங்கேயும் போயிடாத இன்னிக்கு முங்கவருக்கு(சாயங்காலம்
கடலுக்கு செல்லுதல்) வலை தள்ளணும்.."
பொதுவாக
மீன்பிடித்து கரைக்கு வந்தபின்பு வலையை தென்னும்போது(வலையை விரித்தல்) பீத்தைகளை
முடிச்சுபோட்டு வைத்துவிட்டால் பிறகு நேரம் கிடைக்கும்போது ஒவ்வொரு முடிச்சை
அவிழ்த்து நூலால் பித்தையை சரிபார்ப்பது வழக்கம். அவ்வாறு நேற்று காலையில் கரைக்கு
வந்தபோது அப்பவுடன் வலைதென்னும்போது
முடிச்சு போட்டு வைத்திருந்த வலைப்பகுதியை மர ஊசியில் போடப்பட்ட நூலால் சரிசெய்ய
உட்கார்ந்தான் பெஞ்சமின்.
அவன்
கைகள் லாகவமாய் வலையின் கிழிசலை வெகுவேகமாய் அடைத்துக்கொண்டிருந்தாலும் அவன் மனம்
திரும்ப திரும்ப இளஞர் இயக்கத்தின் முதல்கட்ட செயல்பாடுகள் என்னவாக இருக்கவேண்டும்
என்று யோசித்துக்கொண்டிருந்தது. ஊரின் முக்கிய பிரச்சனைகள் என்னென்ன என்று
பட்டியல் போட்டுக்கொண்டிருந்தது.
"பெஞ்சமினு
மெட்ராஸ்ல வேலைக்கு ஆப்லிகேசன் போட்டிருந்தியே பதில் வந்திச்சா.." -
கிட்டதட்ட அவன் மறந்துவிட்ட விசயத்தைதை அப்பா இன்னும் மறக்காமல் கேட்டது அவனுக்கு
ஆச்சரியத்தை கொடுத்தது.
எந்த
கடலோடி அப்பாவும் தன் மகனை படிக்க வைக்கும் நோக்கமே இதுதான். தான் கடலுக்குப் போய்
காற்றிலும் கடலிலும் கஷ்டப்படுவதுபோல் தன் மகனும் கஷ்டப்படக்கூடாது
என்பதற்காகத்தான். என்னால்தான் படிக்க முடியல என் மகனாவது படிச்சிமுன்னேறட்டும்
என்று நினைக்காத தந்தை உள்ளம் கடலோரத்தில் இல்லவே இல்லை என்று சொல்லலாம்.
இன்று
விஞ்ஞானம் மீன் பிடித்தொழிலை எந்திரபடகுகளாய் பரிணமிக்க வைத்திருந்தாலும் கடலோடிகளின்
கடும் உழைப்பின் அளவும், இயற்கையின் சீற்றத்தை எதிர்கொள்ளும் சூழலும் அதிகரித்தே
உள்ளது என்றுதான் சொல்லமுடியும்.சிறு கட்டுமரம் முதல் பெரிய விசைப்படகுகள் வரை
இந்த விதிகளுக்கு அப்பாற்பட்டது அல்ல.
கடுமையான
கடல் போராட்டத்துப்பின் கிடைக்கும் பணம் தன் குழந்தைகளின் படிப்புக்காக,
திருமணத்திற்காக செலவிடுவதில்தான் ஒரு கடலோடி முழுதிருப்தியடைகிறான். ஆனால்
இதற்கான பண சேமிப்பு சிலரின் சுயகௌரவ சண்டைகளினால் வழக்காடுமன்றகளில்
கொட்டப்படுவது சிறுவயதுமுதலே பெஞ்சமினின் இதயத்தில் ஆழமான வடுவாக பதிந்துகிடந்தது.
இப்படிப்பட்ட
நிகழ்வுகள் கடலோடிகிராமங்களின் பொருளாதரவளர்ச்சியை வெகுவாக பாதிப்பதோடு
சமூகமதிப்பீட்டையும் குறைத்துவிடுகிறது. எனவே இப்படிப்பட்ட சமூக அவலத்தை
எதிர்ப்பதே புதிதாக தொடங்கியிருக்கும் இளைஞர் இயக்கத்தின் தலையாய பணியாக
இருக்கவேண்டுமென்று அவன் மனதிற்குள் உறுதியும் செய்துகொண்டான்.
தன்
தந்தையின் கேள்விக்கு பதில் சொல்லுமுன் இப்படியெல்லாம் மனதிற்குள்
எண்ணிமுடித்திருந்த பெஞ்சமின், "இன்னும் பதில் வரலேப்பா பெரும்பாலும் ஒண்ணு
ரெண்டு நாள்ல தெரிஞ்சிடும்" - என்று அரைமனதுடன் சொல்லிவைத்தான்.
மறுநாள்
காலையில் வீட்டு வாசலில் தபால்காரர் அவன் பெயர் சொல்லி அழைத்தபோது அவனுக்கு
புரிந்துவிட்டது, தான் இந்த ஊரை பிரியும் நாளும் நெருங்கிவிட்டதென்று.
வேலைதேடும்
இளஞனுக்கு நேர்முகத்தேர்வுக்கு அழைப்பு வந்தால் அதைவிட சந்தோசம் என்ன இருக்க
முடியும். ஆனால் அது அவனுக்கு சோர்வையே தந்தது. சிறு வயதிலிருந்து ஊரைப்பிரிந்து
இருந்ததில்லை.படிக்கும் போது சுற்றுலா சென்றபோது அதிகபட்சமாய் ஐந்து நாட்கள்
இருந்திருகிறான் அவ்வளவுதான்.
வீடு,
வீட்டுக்கு பின்புறம் பாறைகளோடு கடல் அடிக்கும் ஓசை, தினந்தோறும் குளிக்கும் ஆறு,
குருவிகல், கும்பாரிகல்..ஆற்றுக்கு அக்கரையில் காலபந்து விளையாடும் வெள்ளைமணல்,
பக்கத்து ஊரில் இருக்கும் பஞ்சாயத்து நூலகம், இளைஞர் இயக்கம் - இப்படி யோசிக்கும்
போதே அவனையறியாமல் சௌமியாவின் அகன்ற விழிகளும் குழந்தைத்தனம் மாறாத அழகு முகமும்
அவன் மனத்திரையில் நிழலாடியது.
"என்ன
எப்ப மெட்ராஸுக்கு போற.." - அம்மாவின் குரலில் புதிய மகிழ்சி. கண்களில் இன்னும்
கொஞ்சநாள் இவனை பார்க்கமுடியாதே என்பதால் ஒருவருடத்திற்கான பாசம்.
"நான்
போகலைமா.."
"யேன்.."
- அம்மாவின் குரலில் இருந்தது. கோபமா, ஏமாற்றமா அவனால் உணரமுடியவில்லை.
"ஊரெல்லாம்
விட்டு என்னால போகமுடியாதம்மா.."
"பின்ன
இந்த ஊரில இருந்து கடலுக்கு போயே கஷ்டப்படப்போறியா.."
"எனக்கு
இதுதான் பிடிச்சிருக்கு..இந்த ஊர் இதெல்லாம் என்னால பிரிஞ்சு இருக்க
முடியாதம்மா."
"பின்ன
எதுக்கு படிச்ச சின்ன வயசிலேர்ந்தே கடலுக்கு போயிருக்கவேண்டியத்தானே"
"படிச்சிட்டு
கடலுக்கு போனா பாவமாம்மா"
"எல்லாம்
உன் நல்லதுக்குதான் சொல்லுதேன் எங்களை போல நீயும் கஷ்டப்படக்கூடாதுனுதான்
சொல்லுறேன் சொன்னாகேளு போ.." - அம்மாவின் குரல் உறுதியாய் ஒலிக்க, தாயுக்கும்
மகனுக்கும் உள்ள உரையாடலை வீட்டு திண்ணையிலிருந்து கேட்டுக்கொண்க்டிருந்த அப்பா
உள்ளே வந்தார்.
அம்மாவை
பார்த்து சொன்னார், " இங்க பாரு அவனை படிச்சவச்சிட்டோம் எல்லா விவரமும்
அவனுக்கு தெரியும். அவன் இஷ்டப்படி அவனை விடு. என்னைகாவது ஒரு நாள் இந்த ஊரே
வேண்டாம்னு கூட அவனுக்கு தோணலாம் அப்ப அவனுக்கு நீ சொல்லுறது ஒரைக்கும்.
அதுவரைக்கும் அவன் போக்கில யுடு"
அப்பா
சொல்ல, அம்மா அவனை விட்டுவிட்டு அப்பாவை பிடித்துக்கொண்டார்.அவர்களின் வாக்குவாதம்
காதைப்பிளக்க பெஞ்சமின் மெல்ல அறைக்கு வந்து வைரமுத்துவின் சிகரங்களை நோக்கி
புத்தகத்தை எடுத்து வாசிக்க மெல்லிய குரலில் வாய்விட்டு வாசித்தான்.
"
நீங்கள் ஒரு ரூபாயை தூக்கி பிடித்து
ஓட்டையை
சோதிப்பவர்கள் - நானோ
வண்ணத்துப்பூச்சியின்
சிறகுகளை வாசிப்பவன்.
நீங்கள்
எழுதுவது கணிதம்.
நான்
எழுதுவதோ கவிதை.
கணிதம்
வாழ்க்கையின் ஒரு பகுதியென்று
எனக்கு
புரிகிறது.
கவிதையும்
வாழ்கையின் ஓரு பகுதியென்று
உங்களுக்கு
புரியவில்லை.."

Post a Comment