அது ஒரு மழைக்காலம்
காலையில் கண் விழித்த
என் கண்ணில்
முதல் தரிசனமாய்
விழுகிறாய் நீ!
பேருந்து நிறுத்தத்தில்
குடைபிடித்துக்கொண்டு
வெள்ளை மேகமாய்
நிற்கிறாய் நீ..!
மழைச் சாரலை
கொண்டு வரும் காற்று
உன் சிணுங்களில்
சிதைந்து போகிறது..!
குடையின் கீழ்
ஒரு கொடைககானல்
உன்னைப் பார்க்கையில்
அப்படித்தான் தோன்றியது
எனக்கு..!
அப்போது
உன் பெயர்
எனக்கு தெரிந்திருக்கவில்லை
எனக்குப் பிடித்த
அத்தனை பெயர்களையும்
உனக்கு சூட்ட முயன்றும்
உன் அழகின் முன்
அவை அழகிழந்து போனதால்
உனக்குப் பெயர் வைக்க முடியாமல்
தோற்றுப்போனேன் நான்..!
உன் கூந்தல்
மல்லிகை பூக்களை
சூடிக்கொண்டிருக்க
உன் கன்னங்களை
நாணப்பூக்களால்
வண்ணம் பூசி இருந்தாய்..!
உதடுகளில்
குடியிருக்கும்
நிரந்தரப் புன்னகையில்
நவீன மோனலிசாவாய்
அதிசயம் காட்டினாய்..!
வருவோர் போவோரெல்லாம்
உன்னை வியந்து பார்க்க
நீ
யாரையும் பார்க்காமல்
கர்வத்துடன்
நின்று கொண்டிருந்தாய்..!
வந்த பேருந்து
உன்னை மொத்தமாய்
அள்ளிக்கொண்டு சென்றுவிட
கொட்டும் மழையிலும்
பாலைவனமானது
சற்றுமுன்
நீ நின்ற பூமி..!
நாளை
உன்னை
மறுபடியும் பார்ப்பேன்
நம்பிக்கை மட்டுமே
என்னிடம் மிச்சமிருந்தது..!
காலையில் கண் விழித்த
என் கண்ணில்
முதல் தரிசனமாய்
விழுகிறாய் நீ!
பேருந்து நிறுத்தத்தில்
குடைபிடித்துக்கொண்டு
வெள்ளை மேகமாய்
நிற்கிறாய் நீ..!
மழைச் சாரலை
கொண்டு வரும் காற்று
உன் சிணுங்களில்
சிதைந்து போகிறது..!
குடையின் கீழ்
ஒரு கொடைககானல்
உன்னைப் பார்க்கையில்
அப்படித்தான் தோன்றியது
எனக்கு..!
அப்போது
உன் பெயர்
எனக்கு தெரிந்திருக்கவில்லை
எனக்குப் பிடித்த
அத்தனை பெயர்களையும்
உனக்கு சூட்ட முயன்றும்
உன் அழகின் முன்
அவை அழகிழந்து போனதால்
உனக்குப் பெயர் வைக்க முடியாமல்
தோற்றுப்போனேன் நான்..!
உன் கூந்தல்
மல்லிகை பூக்களை
சூடிக்கொண்டிருக்க
உன் கன்னங்களை
நாணப்பூக்களால்
வண்ணம் பூசி இருந்தாய்..!
உதடுகளில்
குடியிருக்கும்
நிரந்தரப் புன்னகையில்
நவீன மோனலிசாவாய்
அதிசயம் காட்டினாய்..!
வருவோர் போவோரெல்லாம்
உன்னை வியந்து பார்க்க
நீ
யாரையும் பார்க்காமல்
கர்வத்துடன்
நின்று கொண்டிருந்தாய்..!
வந்த பேருந்து
உன்னை மொத்தமாய்
அள்ளிக்கொண்டு சென்றுவிட
கொட்டும் மழையிலும்
பாலைவனமானது
சற்றுமுன்
நீ நின்ற பூமி..!
நாளை
உன்னை
மறுபடியும் பார்ப்பேன்
நம்பிக்கை மட்டுமே
என்னிடம் மிச்சமிருந்தது..!

Post a Comment